வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழா 2021

அன்பானவர்களே,

பகரினில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழாவானது, இம்மாதம் ஆகஸ்ட் 31-ம் தியதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 9-ம் தியதி திருத்தேர் பவனியுடன் நிறைவுபெறவுள்ளது.

திருவிழா திருப்பலியில் கலந்துகொள்வோருக்கான முக்கிய அறிவிப்புக்கள்:

1. முதல் மற்றும் கடைசி நாள் திருவிழாக்கள், மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

2. 2-வது திருவிழா முதல், 9-ம் நாள் திருவிழா வரை, நவநாளுடன் திருப்பலிகள் முறையே, மாலை 6.00 மணிக்கும், 7.45 மணிக்கும் ஆரம்பமாகும்.

3. நவநாள் திருப்பலி நாட்களில் (1 to 9-ம் திருவிழா வரை), 30 நிமிடங்கள் நவநாள் செபம் ஏறெடுத்தபின், திருப்பலியானது (மாலை 6.30 & 8.15 மணி) ஆரம்பமாகும். பதிவு செய்தவர்கள் முன்னரே வந்து கலந்துகொள்ளலாம்.

4. பதிவு செய்தவர்களுக்கு, திருப்பலியின் ஒருநாளுக்குமுன், உறுதிபடுத்தும் குறுந்தகவல் (confirmation message) அனுப்பப்படும். உறுதிபடுத்தப்பட்டவர்களே அனுமதிக்கப்படுவார்கள்.

5. பதிவு செய்து, திருப்பலிக்கு வருபவர்கள், கையில் CPR, தடுப்பூசி பச்சைக்கவச சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாகும்.

6. ஆலயத்தின் உள்ளே நுழைந்தது முதல், வெளியே செல்லும்வரையும், திருப்பலியின்போதும், அனைவரும் கட்டாயம் Face Mask அணிந்திருக்க வேண்டும்.

7. ஆலயத்தினுள் வருகின்றபோது, முன்புற வாசலையே (Big metal gate) பயன்படுத்தவும். திருப்பலி முடிந்தபின், OLAA-வின் பின்புற வாசலை பயன்படுத்தி, தாமதமின்றி வெளியேறவேண்டும்.

8. ஆலய பீடத்தின் முன்பு வைப்பதற்கு பூக்கள் வழங்கவிருப்பவர்கள், திருப்பலிக்கு 15 நிமிடங்களுக்குமுன் கொண்டுவந்து வைக்கலாம்.

9. இன்றுவரை அனைத்து 8.15 மணி திருப்பலிகளும் பதிவு முடிந்துவிட்டது. திருவிழா திருப்பலி காணவிரும்புபவர்கள் மாலை 6.30 மணி திருப்பலிகளுக்கு பதிவுசெய்யலாம்.

10. திருப்பலி தொடங்கும் முன்னரோ, முடிந்த பிறகோ, கூட்டமாக அரங்கத்தினுள் or ஆலயவளாகத்தினுள் கலந்துரையாடுவதை கட்டாயம் தவிர்க்கவும்.

11. திருப்பலி துவங்குவதற்கு முன் வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

12. திருப்பலியில் காணிக்கை பவனி நடைபெறாது. காணிக்கை பைகளில் எடுக்கப்படும்.

13. 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கும், 59 வயதிற்கு மேற்பட்டோருக்கும் அனுமதியில்லை..

14. பிறமொழி நண்பர்களை அழைத்துவருபவர்கள், இத்தகவலை தெரிவித்து அழைத்து வரவும்.

நன்றி

பகரினில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழாவானது, இம்மாதம் ஆகஸ்ட் 31-ம் தியதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 9-ம் தியதி திருத்தேர் பவனியுடன் நிறைவுபெறவுள்ளது.

திருவிழா திருப்பலியில் கலந்துகொள்வோருக்கான முக்கிய அறிவிப்புக்கள்:

Leave Comments

"" was added to wishlist