Alter Server

பீடச்சிறார் குழு


தமிழ் கத்தோலிக்க இறைமக்கள் சமூகத்தில் அதிகமான பீடச்சிறார்களை திருப்பலிப் பீடச் சேவைக்கு உட்படுத்துவது மட்டுமே எமது முதல் நோக்கமாயிருந்தது. அதற்கு முதல் முயற்சியாக நமது தமிழ் சமூகத்தில் உள்ள சிறார்களின் பெற்றோர்களுடன் பேசி அவர்களை பீடப் பணிக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நமது ஆன்மீக வழிகாட்டியின் ஒப்புதலோடு நற்கருணை வாங்காத 7 வயதுக்கு மேற்பட்ட சிறார்களை பணியில் சேர்த்துப் பயிற்ச்சி அளிப்பதன் மூலம் மற்ற சிறார்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் எனவும், அதோடு சிறார்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தும் என்கிற முனைப்பில் 11-08-2017 அன்று புதிதாகப் பயிற்ச்சி அளிக்கப்பட்ட 8 சிறார்களை வெள்ளிக்கிழமை திருப்பலியின் போது பீடச்சிறார்கள் குழுவில் இணைக்கப்பட்டார்கள். அன்றைய தினம் பீடச்சிறார்களின் போட்டிகள், புனித ஜாண் பெர்க்மான்ஸ் அவருடைய விழாவும் கொண்டாடப்பட்டது. ஒரு வருடத்திற்குள் 25 பீடச்சிறார்களுக்கு பயிற்ச்சி வழங்கப்பட்டு பதிவில் இருப்பதோடு இப்போதுத் தொடர்ந்துப் இறைபணிசெய்து வருகிறார்கள்.
இரண்டாவதுக் கட்டமாக புதிய, பழைய பீடச்சிறார்களுக்கு தேவையான பயிற்ச்சிப் பாசறை அமைப்பது என தீர்மானித்து, அன்னை வேளாங்கண்ணி திருவிழா முடிவுபெற்று பாடசாலை விடுமுறையின் போது செப்டம்பர் 25, 2017 முழுநேர பயிற்சி முகாமானது ““Out Bound Training” Zenya Summing Pool –ல் நடத்தப்பட்டது. பெற்றோர்களும், பீடச்சிறார்களும் ஆர்வத்தோடு இப்பயிற்ச்சியில் கலந்துகொண்டனர். ஆன்மீக வழிகாட்டியும் எம்மோடு இணைந்து முழுநேரப் பயிற்ச்சிக்கான சொற்பொழிவு ஆற்றி, பயிற்ச்சி முகாம் வெற்றிபெற பெரிதும் உதவி அளித்தார்கள்.
அனைத்து பீடச்சிறார்களும் வெள்ளிக்கிழமைகளிலும், இதர திருப்பலி நாட்களிலும் பணிசெய்ய வசதியாக இருபிரிவாக பிரித்து செயல்படக்கூடிய வகையில் St. Gabriel & St. Michel என்று குழுக்களை கொண்டதாக மாற்றியமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

பொறுப்பாளர்கள்:

திருமதி. கிறிஸ்டினா மோகன்பாபு – 33920632

திரு. அம்புறோஸ் ஸ்டான்லி – 39864707

"" was added to wishlist